தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, திமுக தரப்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப் படுவதற்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். கமல்ஹாசனும், நானும் நெருங்கிய நண்பர்கள் தான் ஆனாலும் தமிழகத்தில் மூன்றாவது கட்சி என்பது வலிமையாக இருக்க முடியாது. திமுக கூட்டணி வலிமையாக இருப்பதால் பாஜகவை வீழ்த்திவிடும்” என்று கூறியுள்ளார்.