Categories
உலக செய்திகள்

“டிக்கெட் எடுக்க நின்ற பெண்”… பாக்கெட்டில் கைவிட்டு கைவரிசையை காட்டிய நபர்… சிசிடிவியால் வெளிவந்த உண்மை…!!

லண்டன் ரயில்நிலையத்தில் இளம்பெண்ணின் செல்போனை திருடிய குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஹொல்பொர்ன் டுயூப் என்ற ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக ஒரு பெண் வரிசையில் நின்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் பாக்கெட்டில் மிஹய் ரோமன் என்ற நபர் கையைவிட்டு செல்போனை திருடியுள்ளார். தனது செல்போன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தபோது ரோமன் பெண்ணின் பாக்கெட்டுக்குள் கைவிட்டு செல்போனை திருடியது பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடந்துள்ளது.  புகாரின் பேரில் காவல்துறையினர் ரோமனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி லிவர்பூல் ரயில் நிலையத்தில் வைத்து ரோமனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது ரோமனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் செல்போன் திருடியதற்காக 350 பவுண்ட்  அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Categories

Tech |