இந்தியாவில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் லாட்டரி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி எனும் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தனக்கு கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு பாதியும் தனக்கும் எடுத்துக்கொண்டு செலவு செய்வார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாட்டரி சீட் ஒன்று வாங்கிய நிலையில் இன்று அவருக்கு 80 லட்சம் ரூபாய் அதில் விழுந்துள்ளது .
இதனால் அவருக்கு இன்ப அதிர்ச்சியும் பயமும் இருந்துள்ளது.லாட்டரி டிக்கெட்டை யாரு எடுத்திருவார்களோ என்ற பயத்தால் அவர் போலீசிடம் பாதுகாப்புக்காக உதவியை நாடியுள்ளார். இது குறித்து மண்டல் கூறுவது உண்மை தானா என்று போலீஸ் விசாரித்து விட்டு பின் அவருடைய லாட்டரி சீட் தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இவருக்கு நிரந்தரமான முகவரியும் இல்லை, வங்கியில் சேமிப்பு கணக்கும் இல்லை என்பதால் தற்காலிகமாக ஒரு வங்கிக் கணக்கை தொடங்கி அதில் அவருடைய 80 லட்சம் பணத்தை டெபாசிட் செய்தனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . இவ்வளவு நாள் நாங்கள் வறுமையில் மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தோம். ஆனால் இப்போது இந்த லாட்டரி பணத்தில் புதிய வீடு மற்றும் கார் எல்லாம் வாங்குவேன் என்று அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.