பேருந்து பழுதாகி மாணவர்கள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேருந்தும் திருமானூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி நின்றுள்ளது. அதனால் பேருந்து செல்லாது என கண்டக்டர் கூறியுள்ளார்.
இதனால் மாணவிகள் அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிகளுக்கு நடந்து செள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமானூர் காவல்துறையினர் போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அதில் பள்ளி மாணவர்களை ஏறச்செய்து அவரவர் கிராமங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது எங்களுடைய பகுதிக்கு ஒரு பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் எங்களுக்கு வேறு மாற்று பஸ் கிடையாது அதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.