ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தாலி அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசிகளை வழங்க தடை விதித்தது.இந்நிலையில் ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய பிரான்ஸ் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளது.இதைத்தொடர்ந்து வருங்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க எந்த தடையும் இல்லை என்ற உத்தரவாதம் கூறியதை அடுத்து ஃபிரான்ஸ் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவிர் வேரன் கூறுகையில் ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது தடை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.