Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு பயணம்… ஓடும் பேருந்தில் நேர்ந்த விபரீதம்… போலீஸ் வலைவீச்சு…!!

ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவருடைய மனைவி அகிலாண்டம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து வீடு திரும்பும்போது தனியார் பேருந்து ஒன்றில் ஏறி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது அவர்தான் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அகிலாண்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |