வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டனூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் அபாயகரமான வளைவு ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒக்கூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வளைவின் கீழ் உள்ள ஏரியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது இதே போன்ற நிகழ்வு இங்கு அடிக்கடி நிகழ்வதால் வளைவுகளில் வேகத்தடை அமைத்தால் மட்டுமே இங்கு ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.