நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின் . இதைத்தொடர்ந்து இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . தற்போது கவின் இயக்குனர் வினித் வரப்ரஸாத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார் .
Once again i sincerely thank all the directors from the bottom of my heart for raising the curtain for us.. 🙏🏼🤗❤️ @Nelsondilpkumar @Dir_Lokesh @VigneshShivN @AjayGnanamuthu @Ravikumar_Dir @vp_offl
Here is #LiftMotionPoster ⬇️⬆️https://t.co/n069FJYKLe
— Kavin (@Kavin_m_0431) March 5, 2021
மேலும் எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார் . ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நடிகர் கவின் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .