Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.68?…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் விலை குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், நாடு முழுவதும் அதன் சில்லரை விற்பனையில் பெட்ரோல் விலை 75 ரூபாய் ஆகவும், டீசல் விலை 68 ரூபாயாகவும் குறையும் என எஸ்பிஐ-இன் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4% மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |