Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள…. தயாராக இருக்கனும்…. இந்திய ராணுவத்துக்கு…. பிபின் ராவத் எச்சரிக்கை…!!

சீனா பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று பிபின் ராவத் முன்னெச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே லடாக் எல்லையில் நடைபெற்ற பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவத்துக்கு சீனா தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. மேலும் இன்னொருபக்கம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்தியதால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் காணொளி காட்சி மூலம் தெலுங்கானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது இந்த விழாவில் பேசிய அவர், “சுதந்திரத்துக்கு முன்னர் சிறிய படையாக இருந்த நம் நாட்டு ராணுவம் தற்போது நவீன போர்க்கருவிகளுடன் வலுவான படையாக மாறி உள்ளது. அது மட்டுமின்றி மற்ற நாடுகளை விட இந்திய ராணுவம் அதிக அளவிலான சவால்களை சந்தித்து வருகின்றது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நம் இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போர் திறமைகளின் மாற்றத்தை உள்வாங்கி அதை திறமையாக செயல்படுத்திய மற்ற நாடுகளின் படிப்பினைகளை நாம் தெளிவாக கற்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |