பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற புதன்கிழமை அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் 36 துறைகளைச் சேர்ந்த 4323 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் தேர்தல் அலுவலர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் இருவரும் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், அலுவலர்களில் 133 பேருக்கு தடுப்பூசி நேற்று போடப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை வரை தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு சனிக்கிழமை(நாளை) வரை தடுப்பூசி போடப்பட உள்ளது.