கோவக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இன்று தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
சைவ உணவுகளில் காய்கறி முக்கியமான ஒன்று. காய்கறிகளில் கோவக்காய் மிகவும் மருத்துவ குணம் நிறைந்த ஒரு காய். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த கோவக்காயை பயன்படுத்தினால் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் எதுவும் வராது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த காய் உதவுவதாக பெங்களூரில் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே சேர்த்துக்கொண்டால் நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம். வாய் புண்ணை குணமாக்கும் தன்மை இதில் உள்ளது. கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி ,சீரகப் பொடி, இஞ்சி சேர்த்து தேவையான உப்பு கலந்து சாப்பிட்டால் இரண்டு நாட்களில் வாய்ப்புண் குணமாகி விடும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் உடனே குணமாகும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்வதற்கு கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூலநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக இந்த கை பயன்படுகின்றது.