பாஜகவில் ரவுடிகள் சேர்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கும்பகோணத்தில் பிரச்சாரத்திற்கு வரும் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டுவது என அக்கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிறகு பேசிய நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள், என் மீதும்…. எங்கள் கட்சியின் மீதும் அவதூறு பரப்பி இருக்கின்றார். அந்த அவதூறு பரப்பியதை கண்டித்து நேற்று காவல்துறை இயக்குனரிடம் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறோம். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்திருக்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தான் செயல்படுகின்றதா ? என்ற சந்தேகம் எழுகிறது. உரிய பதிலளிக்கவில்லை என்றால் ஸ்டாலின் மீது உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுப்போம். ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுது விடுதலை தமிழ் புலி கட்சி சார்பில் கருப்புக்கொடி காட்டுவதற்கும் தயாராக இருக்கிறோம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.