Categories
உலக செய்திகள்

உலக அளவில் சிறந்த கல்வி நிலையங்கள்… 3 இடத்தை பிடித்த இந்தியா…!!!

 உலகத்தரம் வாய்ந்த முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் மூன்று இடத்தை பிடித்துள்ளது.

உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2021 ஆம் ஆண்டிற்கான பதிப்பு பட்டியல் மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த 12 நிறுவனங்கள் முதல் 100 இடங்களை பிடித்துள்ளன மற்றும் இந்தியாவின் மொத்தம் 25 பாடத்திட்டங்கள் முதல் 100 இடங்களுக்குள் பெற்றுள்ள. இதில் ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ,ஐ.ஐ.டி கரக்பூரில் ஐ.ஐ.எஸ்.சி.பெங்களூர் ,ஐ. ஐ. எம். அகமதாபாத், ஜே.என்.யூ அண்ணா பல்கலைக்கழகம்  டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ .பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் 12 நிறுவனங்களில் அடங்கியுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் முதல் 100 பொறியியல் நிறுவனங்களில் 3 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு இடத்தை பிடித்துள்ளது. ஐ.ஐ.டி பம்பாய் 49 ஆவது இடத்தையும் ஐ.ஐ.டி. டெல்லியில் (தரவரிசை 54 ) ஐ.ஐ.டி. மெட்ராஸ் (தரவரிசை 94) ஐ.ஐ.டி. 101 ஐ .ஐ . எஸ். சி பெங்களூர் 103 ஐ.ஐ.டி. கான்பூர் மற்றும் ஐ .ஐ.டி.ரூர்க்கி  முறையே 107 மற்றும் 170 இடங்களையும் பிடித்துள்ளது. மேலும் உலகில் 30 ஆவது இடத்தை ஐஐடி மெட்ராஸ் பெட்ரோலிய பொறியியல் நிறுவனம் பிடித்துள்ளது. 41 ஆவது இடத்தை பிடித்து ஐடி பாம்பாய் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.ஐ.டி. கரக்பூரில் தாதுக்கள் மற்றும் சுரங்கப் பொறியியல் நிறுவனம் 44 வது இடத்தை பிடித்துள்ளது. உலகில் 50 ஆவது இடத்தை டெல்லி பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. பொருள் அறிவியல் மற்றும் வேதியலுக்கான முறையே ஐ.ஐ .எஸ்.சி பெங்களூர் 78வது இடத்திலும் 93 ஆவது தரவரிசையில் உள்ளது. சட்டப் படிப்பில் தனியார் பல்கலைக்கழகமான ஓ .பி .ஜிண்டால் பல்கலைக்கழகம் 76 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் கலை மற்றும் மனிதநேய துறையில் சிறந்த கல்லூரியாக உருவெடுத்துள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ. கலை மற்றும் மனிதநேய பிரிவில் உலகில் அனைத்து பல்கலைக்கழகங்கள் இடையே 159 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் 250 ஆவது இடத்தையும் சமூக அறிவியல் மற்றும் நிர்வாக பட்டியல் உலக அளவில் 208வது இடத்தையும் ஜவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தை தொடர்ந்து ஐ.ஐ.டி. பம்பாய் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 401 முதல் 405 இடையில் எங்களின் இடத்தை பிடித்துள்ளது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் 148வது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் QS  தனது தர வரிசைகளை கல்வி நற்பெயர் 40% முதலாளியின் நற்பெயர் 10% ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் 20% ஆசிரியர்களின் திறன் 20% மற்றும் சர்வதேச ஆசிரியர் வீதம் மற்றும் சர்வதேச மாணவர் விகிதம் 5% அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கல்வி மற்றும் மனிதநேய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவம் இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை என 5 பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித்துறை QS  பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தி  வருகிறது.

Categories

Tech |