அமெரிக்காவில் 7 வயது சிறுமி தனது அறுவை சிகிச்சைக்காக தானே நிதி திரட்டும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
அமெரிக்கா அலபாமா மாகாணத்தில் எலிசபெத் என்பவர் தன் மகள் லிசாவுடன் வசித்து வருகிறார்.தன் கணவனை இழந்த எலிசபெத் ஏழு வயது சிறுமியான தன் மகளை தனியாக வளர்க்கிறார். இந்நிலையில் லிஷாவுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது. சிறுமி லிஷா தனது சிகிச்சைக்காக பணம் சேர்க்க எலிசபெத் நடத்திவரும் பேக்கரியின் அருகே லெமன் ஜூஸ் விற்பனை செய்து ஒரு நாளைக்கு 10 டாலர் முதல் 100 டாலர் வரை பணம் சேர்த்துள்ளார் .
மேலும் நான் எவ்வளவு சொல்லி பார்த்தாலும் லிஷா அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவள் செய்யும் பணியை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறாள் . இதனிடையில் சிறுமி லிஷா 8 லட்சத்து 76 ஆயிரத்து 378 ரூபாய் சேமித்து உள்ளதாகவும் தாய் எலிசபெத் அறிவித்துள்ளார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக மற்றவர்களிடம் பணம் கேட்பதைக் காட்டிலும் இவ்வாறு பணி செய்து நிதி சேர்ப்பது சரியானது என்று குட்டி லிசா கூறி அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளார்.
இச்சிறுமியை பற்றி அறிந்த குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 2 கோடிக்கும் அதிகமாக நிதியை அளித்தனர். அவள் சிகிச்சைக்குத் தேவையான நிதியை தானே சேர்த்து விடுவேன் என்ற சிறுமியின் மனவுறுதியை அப்பகுதியினர் பாராட்டி அன்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.