Categories
லைப் ஸ்டைல்

புளியில் உள்ள வியக்க வைக்கும் நன்மைகள்… படிச்சா புல்லரித்து போயிருவீங்க…!!!

உடலில் உள்ள பல நோய்களைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் புளியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சில உணவுகளில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி நாம் குழந்தை பருவத்தில் ருசித்து சாப்பிட்ட புளியம் பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அதில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

புளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இதய நோய்களிலிருந்து காக்கிறது. நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயன் அளிக்கிறது. உங்கள் முகத்தில் புள்ளிகள் அல்லது வடுக்கள் இருந்தால் புளியை பயன்படுத்துவது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது. அது சருமத்தை உள்ளே இருந்து சுத்தப் படுத்த உதவுகிறது.

இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. பசியை தூண்டும். இதில் எந்தவித குறிப்பும் இல்லை. செரிமானத்தை சீர்படுத்தும். மலச்சிக்கலை போக்கி வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை குணமாக்கும். முகத்தில் பளபளப்பு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கூந்தலையும் பிரகாசிக்கச் செய்யும். இதயத்திற்கு மிகவும் நல்லது. புளி விதை சாறு இயற்கையில் அலர்ஜி எதிர்ப்பு சக்தியைக் கொண்டது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உதவும். எனவே பல மருத்துவ குணங்கள் நிறைந்த புளியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

Categories

Tech |