தமிழகத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்களின் விலைகள் அனைத்தும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, 15 ஆண்டுகள் இயங்கிய வாகனத்தை இயக்க கூடாது என்ற திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் அத்தியாவசிய பொருள்கள் தேங்கும் நிலை ஏற்படும் என தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம் உள்ளது.