Categories
தேசிய செய்திகள்

எல்இடி பல்புகளின் பயன்பாடு…”38 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் குறைவு”… உச்சி மாநாட்டில் பிரதமர் பேச்சு..!!

எல்இடி விளக்குகளின் பயன்பாட்டைக் அதிகரிப்பதன் மூலம் 38 மில்லியன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொளி வாயிலாக இரு தலைவர்களும் நடத்தினர். இதில் இரு தரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது .அப்போது பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .

இதையடுத்து எல்இடி விளக்குகளின் பயன்பாட்டைக் வைப்பதினால் 38 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைப்பதாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதிப்பிக்க இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |