வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்டிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ்காந்தி. இவர் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் சஞ்சீவ்காந்தியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து சஞ்சீவ்காந்தி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், வினோத்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சஞ்சீவ்காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட 300 ரூபாய் பணத்தை பெற்று அவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.