பன்னீர் சப்பாத்தி சீஸ் ரோல் செய்ய தேவையான பொருட்கள்:
சப்பாத்தி – 5
பன்னீர் – 100 கிராம்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் – 2 (கீறியது)
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
முட்டைகோஸ் – பாதியளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
சோயாசாஸ் – 1 ஸ்பூன்
துருவிய சீஸ் – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதல்ல பன்னீரை துண்டுகளாக நறுக்கினதும் ஒரு சின்ன பாத்திரத்துல போட்டு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நல்ல விரவி விட்டதும், சில நிமிடம் நன்கு ஊற வைக்கணும்.
அடுப்புல கடாயை வச்சி அதில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஊற வச்ச பன்னீர் துண்டுகளை போட்டு நல்லா சிவக்க வறுத்ததும், ஒரு முடியில எடுத்துக்கணும்.
பிறகு அதே கடாயில் நறுக்கி வச்ச வெங்காயத்தை சேர்த்து நல்லா வதக்கினபிறகு,கீறி வச்ச மிளகாய், நறுக்கிய தக்காளியை போட்டு நல்லா குழையும் அளவுக்கு வதக்கியதும், நறுக்கி வச்ச முட்டைகோஸை போட்டு வதக்கிக்கணும்.
மேலும் முட்டைகோஸ் நல்லா வதக்கியதும், இஞ்சி, பூண்டு பேஸ்டை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், ருசிக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகத்தூள் போட்டு நல்லா கிளறிவிட்டுக்கணும்.
பின்னர் கிளறி விட்ட கலவையில் மசாலா வாடை போனபிறகு, அதில் சோயாசாஸை சேர்த்து நன்கு பிரட்டி விட்டதும், வறுத்து எடுத்த பன்னீர் துண்டுகளை போட்டு நல்லா வதக்கி விட்டதும் இறக்கிக்கணும்.
பின்பு ஓவ்வொரு சப்பாத்தியிலும், வதக்கி வச்ச கலவையை சிறிதளவு வைத்ததும், துருவி வச்ச சீஸை சேர்த்து ரோல் பண்ணி எடுத்துக்கணும்.
கடைசியில் தோசை கல்லை அடுப்பில வச்சி, எண்ணெய் ஊற்றி, ரோல் பண்ணி வச்சிருக்கிற சப்பாத்திய வச்சி, நல்லா வெந்ததும், திருப்பி போட்டு வேக வச்சி எடுத்தால் ருசியான பன்னீர் சப்பாத்தி சீஸ் ரோல் ரெடி.