மலச்சிக்கல் என்பது பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருக்கிறது. உடல் சூடு காரணமாகவும், செரிமான பிரச்சினை காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு உணவு முறைகள் இருக்கிறது. ஆனால் பப்பாளியும் அதற்கான சிறந்த தீர்வாக இருக்கிறது. பப்பாளி ஜூஸ் செய்து குடித்தால் மலச்சிக்கலை போக்க முடியும். எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழம்- 1
எலுமிச்சை பழம் – 1.
இஞ்சி – நறுக்கிய துண்டுகள்
ஐஸ்கட்டி- தேவையான அளவு.
தேன் – தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளியின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும். அதோடு ஐஸ் கட்டி, இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன், சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த பப்பாளி ஜூஸ் குடித்து வந்தால் மலச் சிக்கலைத் தீர்க்கலாம்.