Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் போடலைனு அபராதம்…. ஐயா நான் வச்சிருக்கறது கார்…. மதுரையில் நடந்த கூத்து…!!

மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியில் ராமநாதன் என்பவர் வாடகைக்கு கார் வைத்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான காருக்கு வாகன கடன் கட்டி முடித்திருந்ததால் ஹெச்பி ரத்து செய்வதற்காக மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். அப்போது அவருடைய வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் இருப்பதாகவும், அதை கட்டினால் தான் தகுதி சான்றிதழ் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராமநாதன் 100 ரூபாய் அபராதத்தை கட்டியுள்ளார். அப்போது அதற்கு ரசீது ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்போது அந்த ரசீதில் கடந்த வருடம் ஜூன் 19-ம் தேதி மஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக மதுரை c5 காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதிவு செய்யப்பட்ட நாளில் நான்கு சக்கர வாகனம் தொடர்பானது, அந்த குறிப்பிட்ட நாளில் தன்னுடைய வாகனமானது மைசூரில் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மதுரையிலேயே தன்னுடைய வாகனம் இல்லாத போது நான்கு சக்கர வாகனத்தின் உரிமையாளருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளது என்று ராமநாதன் தெரிவித்துள்ளார். இதனால் இனி வரும் காலங்களில் இது போன்று கேலியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்குமாறு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Categories

Tech |