Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத மாணவி…. வாலிபர்களின் முகம் சுளிக்கும் செயல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளவாய் பட்டினம் பகுதியில் சேக் தாவூத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சையது பாஷா என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஆட்டோ டிரைவரான அப்பாஸ் அலி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் சையது பாஷாவிற்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் சையது பாஷா அந்த மாணவிக்கு கடந்த 14ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அப்பாஸ் அலியும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அங்கிருந்து தப்பி ஓடிய மாணவி தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்பின் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் சையது பாஷா மற்றும் அப்பாஸ் அலி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |