ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை வாடிக்கையாளர்களுக்கு குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக உள்ள ஐசிஐசிஐ வங்கி வீட்டு கடன் வாங்க ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதமாக குறைத்துள்ளது. அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.
அதன்படி வங்கியில் 75 லட்சம் வரை வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு இந்த புதிய வட்டி விகிதம் பொருந்தும். மேலும் 75 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து தொடங்கும். இந்த வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.