பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ரீசார்ஜ் சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
அதன்படி மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம், வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன.
அதில் ஆண்டு முழுவதும் வரம்பற்ற அழைப்புகள் பெற, 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் 365 நாட்களுக்கு வேலிட்டி வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த ரீசார்ஜ் பிளான் 30 நாட்கள் கூடுதலாக, 395 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், 395 நாட்களுக்கு பிஎஸ்என்எல் டியூன்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றது.