Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்…சாலையில் தேங்கிய கழிவுநீர்… மயிலாடுதுறையில் பொதுமக்கள் அவதி..!!

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர்கள் சாலையில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2007-ம் ஆண்டிலிருந்து பாதாளசாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் ஆங்காங்கே உள்நுழைவு தொட்டிகள் உடைந்து சாலைகள் உள்வாங்கியுள்ளன. மயிலாடுதுறையில் 15 இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் உடைந்து சேதமடைந்ததுள்ளது. மேலும் சில நாட்களுக்கு பின் அவை சீரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 16-வது இடமாக தரங்கம்பாடி பகுதியில்
ஆள்நுழைவு தொட்டி உடைந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் கழிவுநீர் சாலைகளில் தேங்கிய வண்ணம் உள்ளது. அப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கழிவுநீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சத்தில் உள்ளனர். பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Categories

Tech |