சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதுமட்டுமன்றி பாஜகவுக்கு 20 தொகுதிகளில் நேற்று ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர் நேர்காணலும் முடிவுற்ற நிலையில், இன்று தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.