உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வால்மிளகின் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வால்மிளகு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இது வயிற்று வலி, வாதம், பித்தம், கபம் இவற்றினால் ஏற்படும் நோய்களை போக்கும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, தொண்டை புண், குரல் கம்மல் ஆகியவற்றைப் போக்கும். நீர்சுருக்கு கல்லடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். வாயுவை குணப்படுத்தும். சந்தனப் பொடி, வால் மிளகு பொடி மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
கசகசா, இந்துப்பு, வால்மிளகு சேர்த்து பொடியாக்கி காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் இந்த நோய்கள் தீரும். சிறு குறிஞ்சான் இலை உலர்த்தி சூரணம் செய்து பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும். இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.