சூடானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியை பூனை ஒன்று தாக்கியதால் வானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சூடானில் கார்டூம் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை கத்தாரை நோக்கி டர்கோ ஏர் விமானம் வானில் பறந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென விமானி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பூனை ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த பூனை விமானியை தாக்கியது. அதனால் விமானி பயணிகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விமானத்தை மீண்டும் சூடானுக்கு திருப்பி தர இறக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிரிது நேரத்திற்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது .
இதனைப்பற்றி அந்நாட்டு ஊடகம் விமானத்தில் எவ்வாறு பூனை ஏறி இருக்கும் என்று தெரியவில்லை விமானத்தை சுத்தம் செய்யும்போது அல்லது தொழில் நுட்ப சோதனை மேற்கொள்ளும் போது பூனை உள்ளே வந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.இதுபோன்று அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெவாடாவில் உள்ள அலாஸ்க்கா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் லாஸ் வேகாஸிலிருந்து புறப்பட இருந்த போது இந்த விமானத்தின் இறக்கையில் ஒரு நபர் ஏறியுள்ளார்.
இதனை பயணிகள் விமானத்தில் இருந்த ஒருவர் எடுக்கப்பட்ட வீடியோவில் அந்த நபர் இறக்கையின் மேல் அமர்ந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் காலணிகளையும் சாக்ஸையும் கழட்டிவிட்டு ஜெட் விமானத்தின் இறக்கையின் மேல் ஏற முயன்றுள்ளார். இதுபற்றி அறிந்த அதிகாரிகள் அவனை நோக்கி சென்ற போது பயத்தில் இறக்கையில் இருந்து கீழே தவறி விழுந்துவிட்டான். அதன்பிறகு அவனை லாஸ் வேகாஸ் பெருநகர் காவல்துறையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.