டெல்லி விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள் விவகாரம் என்பதால், அதை பார்வையாளர் ரீதியில் அணுகுவோம் என இங்கிலாந்துக்கான இந்திய தூதர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எது நடந்தாலும் அது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளிலும் இந்திய மக்கள் கணிசமான அளவிற்கு பரவி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 100 நாட்களாக இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ள நிலையில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தப் போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அதன் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி, இந்திய வம்சாவளியினரிடம் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கிய மனுக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
மேலும் இந்தியாவில் நிலவி வரும் பத்திரிக்கை ,சுதந்திரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து வருகிற 8ஆம் தேதி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்துக்கான இந்திய தூதர் அலெக்ஸ் எல்லிஸ் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள் விவகாரம் என்பதால் அதை பார்வையாளர் ரீதியாகவே அணுகுவோம் என தெரிவித்துள்ளார்.