கொழும்புவில் தலையின்றி பெண்ணின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு வீதியில் தலை இன்றி சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .அதன்பிறகு திடீரென தற்கொலை செய்துகொண்ட சந்தேகநபரான போலீஸ் அதிகாரி பெண்ணின் தலையை தனது வீட்டின் கிணற்றில் எரித்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகம் அடைந்தனர் .மேலும் காவல்துறையினர் சந்தேக நபரின் வீட்டுக் கிணற்றில் தேடும் பணி இன்று தொடங்கப்படுகிறது.
இதனிடையில் எவ்வளவு முயற்சி எடுத்தும் போலீசார் பெண்ணின் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனிடையில் சம்பவத்திற்கு தொடர்புடைய சந்தேக நபரான போலீசாரின் உடை அவர் வீட்டின் முன் எரிக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது