Categories
உலக செய்திகள்

அனைத்து மக்களுக்கும் இலவச பரிசோதனை.. மாதம் 5 முறை சுய பரிசோதனை.. பெடரல் கவுன்சில் வலியுறுத்தல்..!!

ஸ்விட்சர்லாந்தில் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 5 முறை சுய பரிசோதனைகள் செய்ய பெடரல் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்விட்சர்லாந்தில் குடிமக்கள் அனைவருக்கும் வரும் 15ஆம் தேதி முதல் இலவச பரிசோதனை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்தகட்டமாக  ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் மார்ச் 22ஆம் தேதி அன்று உறுதி செய்யப்படும்.

மேலும் பெடரல் கவுன்சில் இது குறித்த முடிவுகளை மார்ச் 19ம் தேதியில் தெரியப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் ஏற்படாத சிலரும் தங்களை பரிசோதிக்க விரும்புவர். அவர்களுக்கும் மார்ச் 15-ம் தேதியிலிருந்து பெடரல் அரசு சோதனைகளுக்கான செலவுகளை ஏற்க முடிவு எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பெடரல் கவுன்ஸில் உமிழ்நீர் மாதிரிகளை வைத்து பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை மக்கள் சுய  பரிசோதனைகளை செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும் தற்போது விரைவாக மாதத்திற்கு 5 முறை இலவச சுய பரிசோதனைகள் செய்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பெடரல் அரசு கோரியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் பெடரல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |