தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தேர்தலில் களமிறங்கும் அசாதுதீன்ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி நிறைய வாக்குகளை பிரித்தது.
இதனால்தான் திரு. லாலு பிரசாத் யாதவ் கூட்டணி கட்சி பீகாரில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.இந்தநிலையில் இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. தமிழகத்திலும் ஏஐஎம்ஐஎம் என்ற கட்சி ஒவைசி தலைமையில் போட்டியிடுகிறது. முஸ்லிம் சமூகத்தினர் மேற்கு வங்காளத்தில் முர்ஷிதாபாத், தெற்கு தினாஜ்பூர் மால்டா, வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் நிறைய உள்ளனர்.
முஸ்லிம்களின் வாக்கு இக்கட்சிக்கு கிடைக்கும் என்று நம்பி அதிகளவிலான பகுதியில் மஜ்லிஸ் கட்சி போட்டியிட உள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் மொத்தம் 22 தொகுதிகள் உள்ளன. அதில் 13 தொகுதி வேட்பாளர்களை மஜ்லிஸ் கட்சி முடிவு செய்துள்ளது. வேட்பாளர்கள் மற்ற மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் ஓவைசி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடஉள்ளார் . மார்ச் 13-ந் தேதி அவர் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். முதலில் சாகர்திகியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து பின்பு அவர் மேற்குவங்காளம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தேர்தலில் களமிறங்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.