பிரிட்டனில் நடைபாதையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று கீதிகா கோயல் என்ற 29 வயதுடைய பெண் தான் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் லெய்செஸ்டர் சேர்ந்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரை தற்போது காவலில் வைத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களிடம் மேற்கொண்ட விசாரணை போன்று இச்சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பொதுமக்கள் சிலர் அதிகாலை 2: 25 மணியளவில் தெருவின் நடைபாதையில் ஒரு பெண் பலத்த காயமடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் கிழக்கு மிட்லான்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கல் யாருக்காவது தெரிந்தால் உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் உதவி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.