பிளஸ்-2 மாணவி குளிப்பதை செல்போனில் படம் எடுக்க முயன்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி கிராமத்தில் 17 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மாணவி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் பிடிக்கும் முயன்றுள்ளார்.
இதனை கண்டதும் மாணவி கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் வெங்கடேசன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.