Categories
தேசிய செய்திகள்

“டேய் சாக்லேட் வேணும்” பேபி இதோ நிறைய சாப்பிடு…. கடைசியில் கம்பி எண்ண சென்ற காதலன்…!!

இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய காதலிக்காக நிலவை கேட்டால் கூட வாங்கி கொடுக்கிறேன் என்கிற காதலர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவில் தனியாக சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய காதலி சாக்லேட் சாப்பிடனும் போல  இருப்பதாக கூறியுள்ளார். எனவே எங்கேயாவது சென்று சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவினேஷ் கடைக்கு சென்ற போது அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்துள்ளது.

எனவே என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்த பெட்டிக் கடையின் பூட்டை உடைத்துரூ .2000 மதிப்புள்ள சாக்லேட்களை திருடி தன்னுடைய காதலியிடம் கொடுத்து அவருடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை கடையின் உரிமையாளர் கடையை வந்து பார்த்தபோது பூட்டு உடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவினேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவினேஷ் தன்னுடைய காதலிக்காக சாக்லேட் திருடியது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |