Categories
சினிமா தமிழ் சினிமா

புதுமணத் தம்பதிகளுக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்… வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல தயாரிப்பாளர் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. இத்திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நிரஞ்சனி. இந்நிலையில் கடந்த வாரம் நிரஞ்சனிக்கும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்தது.

தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சனிக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!– News18 Tamil

இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் தயாரிப்பாளரான ஆன்டோ ஜோசப் புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேசிங்கு பெரியசாமிக்கு தயாரிப்பாளர் வழங்கிய சர்ப்ரைஸ் திருமண பரிசு! |  Webdunia Tamil

Categories

Tech |