கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமை பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது. ஏற்கனவே இவர் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை பெற்றிருந்தாலும், மீண்டும் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தலைமையிடம் ஏற்கனவே விண்ணப்பம் அளித்து இருந்தார்.
நேற்றைய தினம் அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணியில் சட்டப்பேரவை தொகுதியில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் பாஜகவுக்கு ஒதுக்கியது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழுக் கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், வேட்பாளர் பற்றியும் முழுமையாக ஆலோசிக்கப்பட்டது.
இதில்பாஜகவின் முன்னணி தலைவர்கள் பங்கேற்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்டு அண்மையில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் களம் காண்பதற்காக காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் பாரதிய ஜனதா கட்சித் தலைமை தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாய்ப்பு வழங்கி உள்ளார்கள்.