இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக சீனா தனது நாட்டு ராணுவத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
சீன ராணுவம் தான் 20 லட்சம் ராணுவ வீரர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய ராணுவமாக திகழ்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாட்டில் சீனா இரண்டாவதாக உள்ளது .இந்நிலையில் சீனா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டிருக்கு 6.8% உயர்த்தியுள்ளது. அதாவது 209 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் 15,26,504 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை ஒப்பிடும்போது இந்திய ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்கு 65.7பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா முதல்முறையாக தனது பட்ஜெட்டை 200 மில்லியன் டாலரருக்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.