Categories
உலக செய்திகள்

மனித இறைச்சியை விற்ற பெண்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

நைஜீரியாவில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி சமைத்து விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள அனாம்பிரா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்றதாக ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். உலகிலேயே அதிக அளவு குற்றச் சம்பவம் நடக்கும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வறட்சி, பஞ்சம் மற்றும் ஏழ்மை ஆகும். இந்நிலையில் அங்கு உள்ள ஒரு உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் உணவகத்திற்கு விரைந்து சென்று, மனித இறைச்சி விற்கப்படுவதை கண்டறிந்தனர்.

அங்கு மனித உடல் பாகங்களையும் சமூக தயாராக இருந்த இறைச்சியையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அந்த உணவகத்தை நடத்தி வந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டாரா அல்லது இறந்தவர்களின் உடலா என்பது பற்றி போலீசார் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |