Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக செவ்வாயில் பயணிக்கும் பெர்சவரன்ஸ்..!! பூமிக்கு வந்த புகைப்படங்கள்.. வீடியோ வெளியிட்டு நாசா பெருமிதம்..!!

அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்தில் அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி புகைபடங்கள் அனுப்பியுள்ளதாக வீடியோ வெளியிட்டிருக்கிறது. 

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஏவப்பட்டு அது கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்நிலையில் பெர்சவரன்ஸ் தன் முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி புகைப்படங்களை அனுப்பிவைத்திருப்பதாக நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதாவது இந்த விண்கலம் 33 நிமிடங்களில் 6.5 மீட்டர் வரை வெள்ளிக்கிழமை பயணிக்கிறது. இதே போன்று 150 டிகிரி திரும்பி 2.5 மீட்டர் வரை திரும்பி வந்திருக்கிறது. மேலும் அதன் பயண அச்சை படம் பிடித்து பூமிக்கு அதனை அனுப்பி வைத்திருக்கிறது.

மேலும் இந்த விண்கலம் 6 சக்கரங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் இதனை வடிவமைத்த அனெய்ஸ் ஸரிபியன் என்ற பொறியாளர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் அனுப்பப்படும் திட்டத்தில் இந்த வெற்றி புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இதனைத்தொடர்ந்து நீண்டநாட்கள் இயங்கக்கூடிய தன்மை வாய்ந்த பெர்சவரன்ஸ் ரோவரை உருவாக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |