விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாம் பாசிசத்தை நோக்கி செல்கிறோம் என்றும் வருமான வரித்துறையின் செயலை கண்டிக்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனன் கருத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதில், நடிகர் விஜய் வீட்டிலும் தான் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது மாளவிகா மோகனன் ஏன் அமைதியாக இருந்தார் என்று கேள்வி எழுப்பி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.