Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எஃப்’ படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்தது இவர்தான்… யார் தெரியுமா?…!!!

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரிக்  குவித்தது . இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் டீசர் தற்போது வரை 173 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .

Thursday Trivia: Did you know Yash's KGF broke record set by Prabhas  starrer Baahubali 2? Here's how | PINKVILLA

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த பிரபாஸுக்கு தான் இந்த கதையை எழுதியதாக கூறியுள்ளார்.  ஆனால் பாகுபலி படத்தின் வெற்றியால் உச்சத்தில் இருந்த பிரபாஸிடம் கதை சொல்ல முடியாத நிலையில் , கேஜிஎப்  கதையை கேட்ட யஷ் நான் நடிக்கிறேன் என கூறி நடித்துக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |