ஈரானில் விமானத்தை கடத்த முயன்றதாக பயணி ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
ஈரானில் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போக்கர் 100 விமானம் பயணிகளை ஏற்றி விட்டு மஷாத் நோக்கி வியாழக்கிழமையன்று இரவு 10: 22 மணிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தில் உள்ளே பயணிகளில் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள், புரட்சிகர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சென்று கொண்டிருந்த விமானத்தை அவசர அவசரமாக ஈரானில் உள்ள இஸ்பாஹான் விமான நிலையத்தில் தரையிறக்கபப்ட்டது. அப்போது தயாராக இருந்த புரட்சி காவல் படையினர் சம்பத்தப்பட்ட நபரை விசாரித்த பொழுது அவர் விமானத்தை திசைதிருப்பி, கடத்தும் முயற்ச்சியில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டார். இதையெடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.மேலும் கடத்த முயன்ற நபர் பற்றி அதிகாரிகள் தகவல் ஏதும் வெளியிடாததல் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.