பச்சை இளநீரை காட்டிலும் சிவப்பு இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
கோடை காலம் வந்து விட்டது. நாம் அனைவரும் நீராகாரங்களை அதிக அளவில் தேடி செல்வோம். அப்படி அதிகமாக மற்றும் இயற்கையிலே சிறந்தது இளநீர். இளநீர் வெயில் காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஒரு பொருள். இளநீரில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை இளநீர் மற்றொன்று சிவப்பு இளநீர். இதில் எது சிறந்த ஆரோக்கியத்தை தரக்கூடியது என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பச்சை இளநீரைவிட செவ்விளநீர் அதிக அளவில் விற்கப்படும். இதற்கு காரணம் பச்சை இளநீரின் அளவுக்கு சிவப்பு இளநீர் நிறைய கிடைப்பதில்லை என்பதுதான். இதில் கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் பச்சை இளநீரை விட சுவையிலும் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது .
சித்த மருத்துவத்தில் இளநீருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மருந்து தயாரிப்பு முறைகளான லேகியம், தைலம், சூரணம் ஆகியவற்றை தயாரிக்கும் பொழுது தேங்காய் பால், இளநீர் ஆகியவற்றை சேர்ப்பது வழக்கம். அப்படி பச்சை இளநீரை காட்டிலும்,சிவப்பு நிற இளநீர் லேகியம் தயாரிப்பில் அதிக அளவில் பங்கு பெறுகிறது.
பொதுவாக இளநீரில் சுண்ணாம்புச்சத்து, சர்க்கரை சத்தும் அதிகமாக இருக்கிறது. பச்சை இளநீரை காட்டிலும், சிவப்பு இளநீரில் சத்துகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. சிவப்பு இளநீரில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து, காப்பர். மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிக அளவில் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு செவ்விளநீர் குடித்தால் அப்படியே கட்டுப்படுத்தும். இதனால் களைப்பில் இருந்தும் விடுபடலாம்.
முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த ஊட்டச்சத்து கொடுக்கும். அதிலும் குறிப்பாக செவ்விளநீரில் உள்ள சிவப்பு நிற தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருகிறது. தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதற்கு இது மிகவும் சிறந்தது. தினமும் செவ்விள நீர் சாப்பிடுவதால் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் இது கட்டுபடுத்தும்.
அஜீரணக் கோளாறை நீக்கும் நீர் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதோடு, குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்கும். சருமம் நன்கு பொலிவு பெற இதனை குடிப்பது மிகவும் நல்லது. இதனால் முகம் மென்மையாக இருக்கும். சிறுநீரக தொற்றில் இருந்து நம்மைக் காப்பதற்கு இந்த செவ்விளநீர் மிகவும் அருமையான மருந்து. அதோடு சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றை சரி செய்வதிலும் இந்த செவ்விளநீர் முக்கிய பங்கு வகிக்கின்றது.