சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு வரும் 8ஆம் தேதி திமுக அழைத்துள்ளதாகவும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி பேச்சுவார்த்தையின் போது பேசப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.