அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சவார்த்தையில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு சீட்டு கொடுப்பதற்கு அதிமுக ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவின் ஆதரவாளர்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில்ல ஒருவர் இறந்துவிட்ட நிலையில், 2 பேர் திமுகவுக்கு சென்றுவிட்டதால், மீதமுள்ள 15 பேரில் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சசிகலா கேட்டுள்ளார். இதனையடுத்து அதிமுகவின் ஆதரவாளர்கள் பட்டியல் வரும் 9ம் தேதி வெளியிடப்படுவதாகவும், அதில் சசிகலா ஆதரவாளர்கள் இடம்பெறுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.