நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வரும்.
மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையும் தங்க தேரோட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நோயின் தீவிரம் குறைந்து இருப்பதால் மீண்டும் தேரோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி கட்டளைதாரின் குடும்பத்தினர், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து தேரின் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தமிழக அரசினால் வழிமுறைகளை பின்பற்றி வழக்கம்போல் தேரோட்டமும் மற்ற நிகழ்ச்சிகளும் கோவிலில் நடைபெறும் என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.