Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரவு நன்றாக தூங்கி…. காலையில் எழுந்தவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

இலங்கை தமிழர் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் சேகர். இவர் அப்பகுதியில் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ.2500 பணத்தையும், ரூ.1000 மதிப்புள்ள சிகரெட்களையும் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் காலை தனது மளிகை கடையை திறக்க வந்த சேகர் கடையின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |