பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 500 ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த திருமேனி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 31 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தையும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.